நுகர்வோர் எக்ஸ்பிரஸ் புதிய அலுவலகம் மற்றும் யூடியூப் சேனல் ஸ்டுடியோ திறப்பு விழா. தொழில்துறை தலைவர்கள் வாழ்த்து மழை.
திருப்பூர், பின்னலாடை மற்றும் டெக்ஸ்டைல் தொழில்துறையினருக்கான சிறப்பு இதழாக கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நமது, நுகர்வோர் எக்ஸ்பிரஸ் இதழுக்கு இது, 25 ஆம் ஆண்டு பயணமாகும். இந்த வெள்ளி விழா ஆண்டில், புதிய அலுவலகம் மற்றும் யூடியூப் ஸ்டுடியோ திறப்பு விழா கடந்த, 17.07.2025 அன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.இப் புதிய அலுவலகத்தை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவருமான, பத்மஸ்ரீ.டாக்டர்.சக்திவேல் அவர்கள் திறந்து வைத்தார். ஆசிரியர் அறையை, சேவைச் செம்மல் மருத்துவர்.டாக்டர்.முருகநாதன் அவர்கள் திறந்து வைத்தார். யூடியூப் சேனல் புதிய ஸ்டுடியோவை, மாநகர துணை மேயர் திரு.எம்.கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களும், சைமா தலைவர் திரு.வைகிங் ஈஸ்வரன் அவர்களும் திறந்து வைத்து சிறப்பித்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் திரு.இளங்கோவன் அவர்கள்,திருப்பூர் மாவட்ட ரோட்டரி சங்கத்தின் புதிய ஆளுநர் திரு.தனசேகர் அவர்கள், நிட்மா சங்கத்தின் செயலார் திரு. ராஜாமணி அவர்கள், சிம்கா சங்கத் தலைவர் திரு.விவேகானந்தன் அவர்கள், டீமா சங்கத் தலைவர் திரு .முத்துரத்தினம் அவர்கள், ரேவதி மெடிக்கல் சென்டர் நிறுவனர்.டாக்டர்.ஈஸ்வரமூர்த்தி அவர்கள்,சரண் மெடிக்கல் சென்டர் நிறுவனர்.டாக்டர். பழனிச்சாமி மற்றும் அவரது துணைவியார் டாக்டர்.மணிமேகலை பழனிச்சாமி அவர்கள் மற்றும் விண்டு கேர் நிறுவனத் தலைவர் திரு. அந்தோணி அவர்கள், விகாஸ் வித்யாலயா கல்விக் குழுமத் தலைவர் திரு.ஆண்டவர் ராமசாமி அவர்கள், ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி தலைவர் திரு.அருள்செல்வம் அவர்கள், செயலாளர் டாக்டர்.பொம்முசாமி அவர்கள், பொருளாளர் திரு. செல்வம் அவர்கள், செயலாளர் திரு.ஹேமந்த் ஜெயின் அவர்கள் மற்றும் ஏராளமான ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், வாசகர்கள், தொழில்துறையினர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நமது ஆசிரியருக்கு அவர்கள் வாழ்த்தும், பாராட்டுக்களயும் தெரிவித்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன் அவர்கள் திறப்பு விழாவுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே நமது அலுவலகத்துக்கு வந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். அதேபோல திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் திரு.திருக்குமரன் அவர்களும் புதிய அலுவலகத்துக்கு வந்திருந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்த இனிய விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த தலைவர்கள் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் இன் 25 ஆண்டு கால பின்னலாடை தொழில் வளர்ச்சி சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அவர்கள் வழங்கிய வாழ்த்துரைகளை, நமது வாசகர்களுக்கும், தொழில்துறையினருக்கும் வழங்குகிறோம்.
பத்மஸ்ரீ. டாக்டர்.சக்திவேல் அவர்கள்.
திருப்பூரில், கடந்த 25 ஆண்டுகளாக தொழில்துறையினர் வளர்ச்சிக்காக சேவையாற்றி வெள்ளி விழா கண்டிருக்கும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் மாத இதழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். முதல் நாளிலிருந்து இன்று வரை திருப்பூர் தொழில் மேல் அக்கறை கொண்டு, தொழிலில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது, அவற்றில் எல்லாம் என்னென்ன புதிய தகவல்களை தொழில்துறையினருக்கு கொடுக்கலாம் என்று சிந்தித்து அதற்காக செயல்பட வேண்டும் என்ற முறையில் திரு. முத்துக்குமார் அவர்கள் நடத்திவரும் அவரது மாத இதழாகட்டும், அவரது யூடியூப் சேனல் ஆகட்டும் அனைத்தும் திருப்பூர் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு என்றால் அது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் தான் என்பதை அழுத்தமாக கூற விரும்புகிறேன். திருப்பூர் என்றாலே வந்தாரை வாழவைக்கும் ஊர் என்ற சிறப்பு பெருமை உண்டு. அந்தப் பெருமையில் கலந்த நுகர்வோர் எக்ஸ்பிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் மாத்திரம் வளரவில்லை. முக்கியமாக, திருப்பூர் தொழில்துறையையும் வளர்ச்சி பெற அவர்கள் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது வளர்ச்சி தொடரும், அவர்களது வளர்ச்சி திருப்பூருக்கு தேவையான ஒன்றாகும். திரு. முத்துக்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் இந்த 25 ஆண்டுகள் மட்டுமல்ல, 50 ஆண்டுகள், நூறாண்டுகள் இந்த நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வளர வேண்டும், வளர்ச்சி அடைய வேண்டும். திருப்பூருக்கு பயனாக இருக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு. கே.எம். சுப்பிரமணியன் அவர்கள்.
நுகர்வோர் எக்ஸ்பிரஸ் மாத இதழின் புதிய அலுவலக திறப்பு விழாவிற்கு வந்தது மட்டற்ற மகிழ்ச்சி. எனது சொந்த அலுவலகத்திற்கு வந்தால் எப்படி ஒரு பூரிப்பு இருக்குமோ அதுபோல இன்று நான் உணர்கிறேன். இந்த ஊரில் இந்த டெக்ஸ்டைல் தொழில்துறை வளர வேண்டும். இந்த ஊரில் உள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நுகர்வோர் எக்ஸ்ப்ரஸ் சேனல் இன்னும் மென்மேலும் அடுத்த தலைமுறையை நோக்கி வெற்றியைப் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இந்த அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த புதிய அலுவலக திறப்பு விழாவில் நான் கலந்து கொண்டது எனக்கு மேலும் ,மட்டற்ற மகிழ்ச்சி இதை திரு.முத்துக்குமார் அவர்களுடைய அடுத்த தலைமுறை அவர்களும் இதை,மேலும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று இன்னும் பல சிறப்புகளை அடைய வேண்டும் என்ற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் திரு. திருக்குமரன் அவர்கள்.
நுகர்வோர் எக்ஸ்பிரஸ் மாத இதழ் 25 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைப்பது மிகவும் பாராட்டத்தக்கது. மிகவும் அரிதானது. ஏனென்றால், ஒரு பத்திரிக்கை தனது துறையில் 25 ஆண்டு காலம், அதுவும் டெக்ஸ்டைல் துறையில் ஒரு உறுதுணையாக இருந்து அதனுடைய வளர்ச்சிக்கு எவ்வளவு பங்காற்ற முடியுமோ அந்த அளவிற்கு நுகர்வோர் எக்ஸ்பிரஸ் டெக்ஸ்டைல் நியூஸ் திரு. முத்துக்குமார் அந்த பணியை திறம்பட செய்து வருகிறார். அவருக்கும், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கும் அவரது டெக்ஸ்டைல் நியூஸ் யூடியூப் சேனலுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவரது பணி மேலும் ,மேலும் இந்த டெக்ஸ்டைல் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து மேலும் வளர்ச்சி அடைய உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. டெக்ஸ்டைல் தொழில்துறைக்கு நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆற்றும் சேவைகளுக்கு எனது மனதார வாழ்த்துக்கள்.
சைமா சங்கத் தலைவர் திரு.வைகிங் ஈஸ்வரன் அவர்கள்.
வந்தோரை வாழவைக்கும் திருப்பூர் என்ற தலைப்பில், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் முத்துக்குமார் அவர்கள் இந்த சிறப்பான 80, 85 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழில் எப்படி வளர்ந்தது, இந்த திருப்பூர் எப்படிவளர்ந்தது, உலகம் முழுவதும் எப்படி பரவியது என்பதை என்பதை எல்லாம் சிறப்பாக, வருங்கால சந்ததிக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்த இதழை நடத்தி தொடர்ந்து 25 ஆண்டுகளாக டெக்ஸ்டைல் தொழில்துறைக்கான செய்திகளை வெளியிட்டு வரும் திரு.முத்துக்குமார் அவர்களுக்கு சைமா சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துதலையும் கூறிக்கொள்கிறேன்.
நிட்மா சங்கத் தலைவர் திரு. அகில் ரத்னசாமி அவர்கள்.
நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வெள்ளிவிழாவை கொண்டாட தயாராக இருக்கிறது. இந்த தருணத்திலே அவர்களை மனதார வாழ்த்துகிறேன். தன்னால் இயன்றவரை தொழில் துறைக்கு அவர் பக்கபலமாக இருந்து ஒவ்வொரு முறையும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்ற விதத்திலே தன்னுடைய புத்தகத்தை வெளியிட்டு கொண்டிருக்கிறார். அதேபோல இந்த கொரோனா காலகட்டத்திலே அவர் தன்னுடைய தொழில் தன்மையிலே ஒரு மாற்றத்தை கொண்டு வந்து யூடியூப் சேனலை துவக்கினார். அது மிகப்பெரிய வெற்றியாக அமைந்து, இப்போது எல்லோராலும் பாராட்டத்தக்க அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. நாங்கள் எப்படி தொழில் துறையிலே புதிய மாற்றங்களை கொண்டு வருகிறோமோ, அதேபோல அவரும் தொழிலில் சரியான தருணத்திலே மாற்றம் செய்து இன்று மிகப்பெரிய ஒரு செய்தி நிறுவனமாக தொழில்துறை சார்ந்த மக்கள் எல்லாம் விரும்பி பார்க்கின்ற ஒரு செய்தித்துறையாக நுகர்வோர் எக்ஸ்பிரஸ் தற்போது திகழ்ந்து கொண்டிருக்கிறது. அது மேலும், வளர்ந்து வெள்ளிவிழா மட்டுமல்ல, பொன்விழாவும் கொண்டாட வேண்டும் என்று நிட்மாவின் சார்பிலே வாழ்த்துகிறேன்.
திருப்பூர் டையர்ஸ் அசோசியேசன் தலைவர், திரு.காந்திராஜன் அவர்கள்.
திருப்பூர் தொழில்துறை வளர்ச்சிக்கு ஊடகங்களுடைய பங்களிப்பு மிக அவசியம். அதில் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகை திருப்பூர் தொழில்துறை வளர்ச்சிக்கு அன்றாடம் நடக்கக்கூடிய நிகழ்வுகளை, மக்களிடம் கொண்டு செல்வதில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. அன்றாடம் நடைபெறக்கூடிய புதிய செய்திகள் என்னென்ன, புதிய எந்திரங்களின் வருகைகள் அவற்றையெல்லாம் அனைத்து நிறுவனங்களுக்கும், அனைத்து தொழில்முனைவோர்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் திறம்பட செயல்பட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கும் அதனுடைய ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்களுக்கும் அதில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் அவங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
டெக்பா தலைவர் திரு.ஸ்ரீகாந்த் அவர்கள்.
நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கடந்த 25 ஆண்டுகள் எங்களுடனே பயணித்து வருகிறார்கள். தொழில்துறை வளர்ச்சியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க தகவல் தொடர்பு மிகவும் முக்கியம். அதிலும் ஊடகத்துறையில் திரு.முத்துக்குமார் அவர்கள் வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதற்கு மிக முக்கியமான காரணம் அவருடைய அர்ப்பணிப்பு. எப்படி தொழிலில் எங்களுக்கு அர்ப்பணிப்பு இருக்கிறதோ, அதே போன்று இந்த டெக்ஸ்டைல் ஊடகத்துறையில் அவருடைய அர்ப்பணிப்பினால் தான் 25 வருடம் ஊடகத்ததுறையில் வெற்றிகரமாக பயணிக்க முடிகிறது. நாங்கள் நிறைய ஊடகத்துறை நண்பர்கலோடு பழகிட்டு இருக்கேன். நுகர்வோர் எக்ஸ்பிரஸ் மாத இதழில் வரும் செய்திகள் மூலமாக எங்களுக்கு தெரியாத தகவல்களை இப்புத்தக வாயிலாக நாங்கள் தெரிந்து கொள்கிறோம். அதே போன்று உலக அeவில் என்னென்ன மாற்றங்கள் இருக்கிறது. திருப்பூர்ல என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அவரது யூடியூப் சேனல் மூலமாக எங்களை போன்ற தலைவர்களை பேட்டி கண்டு அதனையும் ஒளிபரப்புகிறார். அதன் அடிப்படையில் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் நடந்தும், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் டெக்ஸ்டைல் நியூஸ் யூடியூப் சேனல் எங்களது தொழில்துறைக்கு அளப்பறியா சேவைகளை செய்து வருகிறார்கள். இந்த சேவைகள் தொடர வேண்டும். இந்த வெள்ளி விழா மட்டுமல்ல, அவர் பவழ விழாவையும் கொண்டாட வேண்டும் என்பது எங்களுடைய டெக்பாவினுடைய ஆசை. இதன் ஆசிரியர் அவர்களுக்கும் அவருடைய குழுவினருக்கும் டெக்பாவின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
திருப்பூர் எம்ப்ராய்டரி அசோசியேசன் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன்.
அனைவருக்கும் வணக்கம். திருப்பூர் எம்பராய்டரி அசோசியேஷன் சார்பாக 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா காணும் திருப்பூர் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் மாத இதழுக்கும், திரு.முத்துக்குமார் அவர்களுக்கும், அவர்களுடன் பணியாற்றும் அனைவருக்கும் எங்களது சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இன்றைய காலகட்டத்தில இந்தியாவில் அநேக பத்திரிகைகள் உள்ளது. ஒவ்வொரு பத்திரிகைகளும் தங்கள் சார்ந்த நகரத்திற்கு தங்களது சேவையை அளித்து வருகின்றது. நுகர்வோர் எக்ஸ்பிரஸ் மாத இதழ் நமது திருப்பூருக்கு வரும் வரை நமது திருப்பூருக்கென்று எந்தவிதமான பத்திரிக்கையும் இல்லாமல் இருந்தது. ஆனால் திரு .முத்துக்குமார் அவர்கள் தன் சொந்த முயற்சியில், தனது சொந்த செலவில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்து அன்றிலிருந்து இன்று வரை நமது தொழில்துறைக்கு ஆதரவு அளித்து வருகிறார். நுகர்வோர் எக்ஸ்பிரஸ் மாத இதழ் எங்கeது தொழில் துறைக்கு மிகவும் உற்ற துணையாக இருந்து வருகிறது. இன்று வெளிநாடுகளில் ஒரு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் சரி ஏதேனும் புதுவகை புது ரக எந்திரங்கள் துணிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவற்றை தொழில்துறையினருக்கு கொண்டு சேர்க்கும் தகவல் தொடர்பு ஊடகமாக நுகர்வோர் எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனல் செயல்பட்டு வருகிறது. அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கொரோனா காலகட்டங்களில் செய்தித்தாள்களை தொடுவதற்கே ஒரு அச்சம் இருந்த காலகட்டத்தில் திரு. முத்துக்குமார் அவர்கள் ஒரு யூடியூப் சேனலை துவங்கி அவரது பத்திரிக்கையில் என்னென்ன செய்திகளை வெளியிட்டு வந்தாரோ அவை எல்லாவற்றையும் தனது சேனலில் வெளியிடத் துவங்கினார். நமது தொழிலின் வளர்ச்சிக்கும் நமது தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் அனைத்து தகவல் தொடர்பு முயற்சிகளையும் திரு. முத்துக்குமார் அவர்கள் மேற்கொண்டுள்ளார். அவருக்கு எங்களது சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் வரும் காலத்தில் அவரது சேவை தொடர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
திருப்பூர் ரைசிங் சங்க தலைவர் திரு.எம்.வி.ராமசாமி அவர்கள்.
நான் முதன் முதலில் ஸ்டீம் காலண்ட்ரிங் தொழில்தான் ஆரம்பித்தேன். நான் எந்த இடத்தில் என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறையினரும் அறிந்து கொள்ளும் விதமாக அவர்களிடம் நாங்கள் செய்து தரும் சேவைகளை கொண்டு சேர்க்க விளம்பரம் மிக மிக அவசியம். அதற்காக நான் முதலில் தேர்ந்தெடுத்த ஒரு தகவல் தொடர்பு ஊடகம் நுகர்வோர் எக்ஸ்பிரஸ். எனது தொழிலை விளம்பரம் செய்ய நுகர்வோர் எக்ஸ்பிரஸ் திரு.முத்துகுமார் அவர்களைஅழைத்து விளம்பரம் கொடுத்தேன். கடந்த 25 ஆண்டுகளாக இப்புத்தகத்தில் நடுப்பக்கத்தில் எனது விளம்பரம் இடம்பெற்று தற்பொழுதும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவரும் வளர்ந்து, அவருடன் சேர்த்து என்னையும் வளர்ச்சி அடையச் செய்தார் என்பதை நான் பெருமையோடு கூறிக் கொள்கிறேன். இதற்காக ஆசிரியர் திரு.முத்துக்குமார் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தொழில் செய்பவர்கள் யாராக இருந்தாலும் உங்களது தொழிலை நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்பதை வெளி உலகிற்கு கொண்டு செல்ல உங்களது லாபத்தில் இருந்து ஒரு தொகையை விளம்பரத்திற்கென்று செலவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் தொழில் வெற்றி பெறும் என்பது நான் எனது தொழில் அனுபவத்தில் கண்டுபிடித்த ரகசியம். அனைவரும் விளம்பரத்துக்காக சிறு தொகையை செலவு செய்ய வேண்டும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை தொழில் உலகிற்க்கு தெரியப்படுத்துவது மிக மிக அவசியம். அதுவும் ஒரு தொழில் முதலீடு தான். கடந்த 25 ஆண்டுகளாக எனது நிறுவனத்தை நான் அளிக்கும் பேட்டிகளை புத்தகத்தில் இடம் பெறச் என்னை மேம்படுத்தினார். திரு.முத்துக்குமார் அவர்களுக்கு எனது தலைசிறந்த வாழ்த்துக்கள். அது மட்டுமல்ல இந்த வருடம் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் 25வது பொன்விழா ஆண்டை அடைந்துள்ளது. அதற்காக திரு .முத்துக்குமார் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 25 ஆண்டுகள் மட்டுமல்ல நூறாண்டு காலம் இந்த நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வளர வேண்டும் என்பது என்னுடைய ஆவல். நன்றி வணக்கம்.
கிருத்திகா டிரையர், நிர்வாக இயக்குனர் திரு. மோகன் அவர்கள்.
நுகர்வோர் எக்ஸ்பிரஸ் மாத இதழ் தற்பொழுது 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த தொழிலுக்கும் இந்த ஊருக்கும் திரு .முத்துக்குமார் அவர்கள் எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளார். அந்த வகையில் அவருக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தொழில்துறைக்கு ஒரு இணைப்பு பாலமாக இருந்து வரும் அவரது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் எந்த ஒரு காரியத்திலும் புதுமையையும் புகுத்துகிறார்கள். எந்த ஒரு புதிய துவக்கத்தையும் ,யார் தொடங்கினாலும் ,அவரை அணுகி அதனை தெரிவிக்கும் போது அந்த தகவல்களை நிமிடத்திற்கு நிமிடம் தொழில்துறையினர் மத்தியில் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால், ஒரு புதிய வருகை என்றால் ,ஒன்று அவராகவே அழைத்து அதனை தொழில்துறைக்கு தெரியப்படுத்துவார் அல்லது நாங்கள் அவரை அழைத்து அதனை தொழில்துறைக்கு தெரியப்படுத்த விரும்புவோம். அவை சரியாக தொழில் துறையை சென்று அடையும். தொழில்துறையினர் மத்தியில் ஒரு சிறந்த தகவல் தொடர்பு ஊடகமாக இவரது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்த ஊருக்கும் ,இந்த தொழில் துறையினருக்கு நன்மை செய்வதில் அயராத உழைத்து 25 ஆண்டுகள் இந்த ஊடகத்தை நடத்தி தற்பொழுது இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார். அவரது கடின உழைப்புதான் இந்த வெற்றிக்கு காரணம். இதற்கு அவர்ளோடு இணைந்து பணியாற்றுபவர்கள் அத்தனை பேரும் அவருடன் இறையருள் ஆண்டவனுடைய அனுக்கிரகத்துடன் இரவும், பகலும், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் அனைத்து விதமான சகல வளங்களையும் பெற்று இருக்க வேண்டும் என நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.
டீமா தலைவர் திரு. முத்தரத்தினம் அவர்கள்.
நுகர்வோர் எக்ஸ்பிரஸ் உடைய இந்த 25 இந்த ஆண்டு கால பின்னலாடை தொழில்துறை சேவை என்பது அவர்களின் வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல் என்று சொல்லலாம். பின்னலாடை தொழில்துறையின் தகவல்களை, ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்க்க முக்கிய பங்களிப்பாக இருந்து வருகின்றனர். திருப்பூரின் ஒவ்வொரு காலகட்டங்களில் தொழில்துறையினர் தேவைகளை அரசுக்கு வெளிப்படுத்துவதற்கு உண்டான பெரிய ஒரு பாலமாக நுகர்வோர் எக்ஸ்பிரஸ் அமைந்திருக்கிறது. இன்றைக்கு அவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டுடியோவை நிறுவியுள்ளனர். திருப்பூரில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம் கிட்டத்தட்ட 75 ஆயிரம் கோடி நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். எங்களது தொழில் துறைக்கு ஒரு வெற்றிடமாக இருந்தது. இது போன்ற ஒரு ஸ்டுடியோ தான். அதையும் திரு. முத்துக்குமார் அவர்கள் திருப்பூருக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். இவருடைய பணி மென்மேலும் சிறக்க வேண்டும். இந்த புதிய துவக்கம் தொழிற்துறையினுடைய வளர்ச்சிக்கு பெரிய அளவில் பங்களிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இது மென்மேலும், வeர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
விகாஸ் வித்யாலயா கல்வி குழும தாளாளர் திரு.ஆண்டவர் ராமசாமி அவர்கள்.
நம்முடைய இனிய நண்பரும், எங்களது குடும்ப உறுப்பினருமான திரு.முத்துக்குமார் அவர்கள். தொழில்துறையில் 25 ஆண்டுகளை கடந்து அவர் ஒரு புதிய அலுவலகத்தை உருவாக்கி இருக்கிறார். அதற்கு முதல்கண் என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். திரு.முத்துக்குமார் அவர்கள் திருப்பூரில் அனைத்து பெரிய ஏற்றுமதியாeர்களையும் அனைத்து பெரியவர்களையும் சந்தித்து அவருடைய வாழ்க்கை வரலாறுகளை ஆவணங்களாக்கி அவருடைய யூடியூப் சேனலின் மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கிறார். அதில் அவர் என்னையும் ஆவணப்படுத்தி இருக்கிறார் என்பதை சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் பள்ளியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எங்கள் பள்ளியில் அவர் கலந்து கொள்வார். தொழில்துறை, கல்வி, மருத்துவம் சேவைப் பணிகள் எல்லாவற்றையும் சமூகத்துக்கு தெரியப்படுத்தி, சமூகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துக் கொண்டு செல்வதில் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும், அதன் நிறுவனர் திரு.முத்துக்குமார் அவர்களும் பங்காற்றி வருகிறார்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
சரண் மெடிக்கல் சென்டர், நிறுவனர் டாக்டர் .பழனிச்சாமி அவர்கள்.
நுகர்வோர் எக்ஸ்பிரஸ் கடந்த 25 வருடங்களாக திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு நல்ல செய்திகளை கொண்டு சேர்ப்பதில் முன்னணி இதழாக இருந்து வருகிறது. மேலும், திரு.முத்துக்குமார் அவர்கள் திருப்பூரில் ஒரு பிரத்தியேக ஸ்டுடியோ ஒன்றை அமைத்து இன்னும் பலருக்கு திருப்பூரின் பெருமைகளை கொண்டு சேர்க்க இம்முயற்சியை அவர் எடுத்துள்ளார். அவர்களுக்கு எங்களுடைய இதயம் கணிந்த வாழ்த்துக்கள். முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்பதற்கு எடுத்துக்காட்டாக திரு.முத்துக்குமார் அவர்கள் செயல்படுவார்கள். பழக்கத்தினாலும் அணுகுமுறை தான் அநேக நண்பர்கள் அவருக்கு கிடைப்பார்கள். இன்னும் இந்த பத்திரிக்கை துறையில் பல சாதனைகளைப் படைத்து மென்மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
திருப்பூர் செஸ்ட் ஹாஸ்பிடல் நிறுவனர் டாக்டர். பொம்முசாமி அவர்கள்.
நமது திருப்பூர் மாநகரின் உயிர் மூச்சாக வளர்ந்து கொண்டிருக்கும் நமது நுகர்வோர் எக்ஸ்பிரஸ் இன்று 25 ஆண்டுகளை கடந்து நமது திருப்பூர் தொழில் துறையினருக்கும் பொதுமக்களுக்கும், தேவையான அனைத்து நல்ல செய்திகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதனுடைய புதிய அலுவலக திறப்பு விழா இனிதே நடந்தது. அந்த நிறுவனமானது மென்மேலும், வளர்ந்து பல சிறப்புகளை அடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அதனுடைய நிர்வாக இயக்குனர் நமது அன்பிற்குரிய சகோதரர் திரு. முத்துக்குமார் அவர்களும், அவருடைய குடும்பத்தாரும் மென்மேலும் இந்த நிறுவனத்தை சிறப்பாக நடத்தி நம்முடைய தொழில் துறையினருக்கும் திருப்பூர் மக்களுக்கும் பெரும் சேவையாற்ற அன்போடு வாழ்த்துகின்றோம்.
விண்ட் கேர், நிறுவனர் திரு. அந்தோணி அவர்கள்.
அன்பு சகோதரர் முத்துக்குமார் அவர்களுடைய நுகர்வோர் எக்ஸ்பிரஸ் உடைய 25 வருட கால உழைப்பின் ஒரு சிறப்பான வெளிப்பாடாக இதன் புதிய அலுவலகம் திறப்பு விழா கண்டுள்ளது. அதை தொடர்ந்து யூடியூப் ஸ்டுடியோ திறப்பு விழாவை காண்பதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். திருப்பூர் தொழில் முனைவோர் பலர் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டிருந்தாலும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வழியாக அவர்களுடைய தொழில் தன்மை, அவர்களுடைய வளர்ச்சி, அவர்களுடைய வெற்றியின் சரித்திரத்தை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சென்று அதன் மூலம் அடுத்தவர்களும், மற்றவர்களும் தன்னம்பிக்கை பெற்று தொழிலை உற்சாகமாக செய்வதற்கான மிகப்பெரிய பணியை செய்யக்கூடிய அன்பு சகோதரர் திரு.முத்துக்குமாரை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த நுகர்வோர் எக்ஸ்பிரஸ் பலரை சந்திக்கட்டும். பலருடைய வாழ்வை மகிழ்ச்சியாக்கட்டும். பலருடைய வாழ்வுக்கு வழிகாட்டும் என்று சொல்லி வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தலைவர்கள் அனைவரும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் இன் 25 ஆண்டு கால சேவையை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர். விழாவிற்கு வந்திருந்த தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.முத்துக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பாக வரவேற்று வந்திருந்து சிறப்பித்த ஒவ்வொரு தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Nugarvour Express