திருப்பூரை, தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டைனமிக் பாலா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்
- Repoter 11
- 30 Apr, 2026
திருப்பூரை, தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டைனமிக் பாலா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். பின்னலாடைத் தொழில்துறை
மற்றும் பள்ளி கல்லூரிகளுக்குத் தேவையான, கார்மெண்ட் பர்னிச்சர்கள் மற்றும் அனைத்து வகையான உற்பத்தி தொழில்துறையினருக்குத் தேவையான சாதனங்களையும் வடிவமைத்து தருவதில் தனித்தன்மையுடன் திகழ்ந்துவரும் நிறுவனமாகும்.
இதன் நிர்வாக இயக்குனர், திரு.பாலதீபக் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தத் துறையில் நல்ல அனுபவம் பெற்று ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்று வர்த்தகம் செய்து வருகிறார். கடந்த, 2001ம் ஆண்டு RR ELECTRICALS என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து அனுபவம் பெற்று அடுத்தாக, DSP ELECTRICALS என்ற நிறுவனத்தின் மூலமாக தனது நண்பர்களோடு இணைந்து, இந்தத் துறையில் இவரது அனுபவப் பயணம் தொடங்கியது. நண்பர்களோடு இணைந்த பயணமாக, 2006ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் நல்ல அனுபவத்தை பெற்று, கடந்த 2014ம் ஆண்டு முதல்
டைனமிக் பாலா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, சிறந்த தயாரிப்புகளை வழங்கி, தொழில்துறையின் கார்மெண்ட் பர்னிச்சர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். திருப்பூரிலேயே முதன்முறையாக, கார்மெண்ட்ஸ் பர்னிச்சர் மற்றும் சாதனங்கள் உற்பத்தித் துறையில், பவுடர் கோட்டிங் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இவர்கள் தயாரித்து வழங்கும் சாதனங்கள் அனைத்தும், நீண்ட காலம் உழைக்கும் வகையில் உறுதித் தன்மையோடு வடிவமைக்கப்பட்டு, தொழிலகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, டைனமிக் பாலா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் பல்வேறு சாதனங்கள், தொழில் துறையினரிடையே நல்ல மதிப்பையும், வரவேற்பையும் பெற்றுத் திகழ்கிறது. புதிய பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களை தொடங்கும் தொழில் முனைவோர்களின் இட அளவுக்கு தக்கபடி, இந் நிறுவனத்தாரே லேஅவுட் களை வடிவமைத்து குறைந்த இடத்தில் அதிக துணிகள் மற்றும் ஆயத்த ஆடைகளை இருப்பு வைக்கும் வகையில் ஸ்டோரேஜ்களை தயாரித்து வழங்குகின்றனர். இந்நிறுவனத்தின் மூலமாக Electric Panelகள், FABRIC STORAGE RACKS, ஸ்டோரேஜ் பேலட்டுகள், கட்டிங் டேபிள்கள், ட்ராலிகள், லைன் டேபிள்கள், அதற்குரிய லைட்டிங்கள், மெசின் ஆப்பரேட்டர்களுக்குத் தேவையான பெஞ்சுகள், செக்கிங் டேபிள்கள், ஸ்டோரேஜ்கள், பேக்கிங் டேபிள்கள் போன்ற பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான அனைத்தையும் திருப்பூர், கரூர், ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தங்களது சொந்த தொழிற்சாலைகள் மூலமாக தயாரித்து வழங்கி வருகின்றனர். வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறந்து விளங்கும், கரூர் தொழில் துறையினருக்காக பிரத்தியேகமாக, கரூரிலேயே இந்நிறுவனத்தார் கார்மெண்ட் பர்னிச்சர் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளனர். இதன் மூலமாக, கரூர் பகுதியில் டெக்ஸ்டைல் தொழில்துறையினருக்கு சிறப்பான கார்மெண்ட் பர்னிச்சர் சாதனங்களை தயாரித்து வழங்கி வருகின்றனர். இவர்கள் தயாரித்து வழங்கும் அனைத்து தயாரிப்புகளையும், ஒரே இடத்தில் காணும் வகையில் திருப்பூர் 60 அடி ரோடு எல்.ஜி ஷோரூம் அருகில், மருதாசலபுரம், பகுதியில் அமைந்துள்ள ஷோரூம்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். தரமான தயாரிப்புகளுக்கு வழங்கப்படும், சர்வதேச தரச் சான்றிதழான ணூறீநு 9000 தரச் சான்றிதழையும் இந்நிறுவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் மட்டுமல்லாது பெங்களூர், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் இந்நிறுவனத்தார் தயாரித்து வழங்கும் கார்மெண்ட் பர்னிச்சர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கே.எம்.நிட்வேர்,
எஸ்.பி.அப்பேரல்ஸ், பாப்பீஸ் நிட்வேர், அனுகிரகா பேசன்ஸ் போன்ற பெரிய ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், ஏராளமான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கும், இந் நிறுவனத்தார் கார்மெண்ட் பர்னிச்சர்களை தயாரித்து வழங்கியுள்ளது, இவர்கள் தரத்திற்கு சான்றாக அமைந்துள்ளது. திருப்பூரை போலவே கரூரிலும், புகழ்பெற்ற ஏற்றுமதி நிறுவனங்களான அட்லஸ் மற்றும் ஏசியன் பேப்ரிக்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களையும் வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளனர். இவர்களின் தரக்கோட்பாடுகளை பற்றி டைனமிக் பாலா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.பால தீபக்
அவர்களிடம் கேட்டபோது, எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கு அறிந்து, நீண்ட காலம் உழைக்கும் வகையில் அவர்களின் கார்மெண்ட் பர்னிச்சர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். பின்னலாடை நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தேவையான சேர்கள், பெஞ்சுகள், ரேக்குகள் ஆகியவற்றை நாங்கள் தரமுடன் தயாரித்து வழங்குகிறோம். தரமே எங்கள் தாரக மந்திரம். தரமான தயாரிப்புகளால் தான் டைனமிக் பாலா இண்டஸ்ட்ரீஸ் தயாரித்து வழங்கும் தயாரிப்புகளை தொழில்துறையினர் விரும்புகின்றனர் என கூறினார். உங்களுக்கும் டைனமிக் பாலா இண்டஸ்ட்ரீஸ் தயாரித்து வழங்கும் தயாரிப்புகள் தேவைப்படுமானால் 99432 62166, 95435 62166 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

