மதிப்புக்கூட்டல் பின்னலாடை ப்ரிண்டிங் துறையில் சாதிக்கும் ரம்யா நிட் பிரிண்டிங் நிறுவனம்

திருப்பூரை தலைமையகமாக கொண்டு இயங்கும், பிரிண்டிங் நிறுவனங்களில்  ரம்யா நிட் பிரிண்டிங் நிறுவனம் மிக முக்கியமானது. இதன் நிர்வாக இயக்குனர் 
திரு. ராஜ்குமார் அவர்கள். தொழிலில் மாத்திரமல்ல, சேவை பணிகளிலும் பல்வேறு அமைப்புகளிலும் ஈடுபாட்டோடு செயல்பட்டு வரக்கூடிய ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆவார். சேலத்திலிருந்து 
திருப்பூருக்கு வந்து ஒரு குறிப்பிட்ட தொழிலில் அனுபவத்தை பெற்றுக்கொண்டு சிறிய அeவிலே இந்த நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கி இன்றைக்கு ஏராeமான ஏற்றுமதியாளர்களுக்கும், உள்நாட்டு உற்பத்தியாeர்களுக்கும் தனது நிறுவனத்தின் மூலமாக சேவையாற்றி வருகிறார். அதுமட்டுமல்ல ரம்யா நிட் பிரின்டர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ராஜ்குமார் அவர்களுடைய துணைவியார் திருமதி.புவனேஸ்வரி ராஜ்குமார் அவர்கள் நிர்வாக காரியங்களில் பொறுப்பேற்று அதற்கு பக்கபலமாக இருந்து வருவதாகவும் 
அவர் நம்மிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும், நமது இதழுக்காக அளித்த பேட்டியை நேயர்களுக்காக வழங்குகிறோம்.
கேள்வி: பின்னலாடை பிரிண்டிங் தொழில்துறையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறீர்கள். ரம்யா நிட் பிரிண்டர்ஸ் தொடக்கம் அதன் வளர்ச்சி குறித்துச் சொல்லுங்கள்? 
என்னுடைய சொந்த ஊர் சேலம். 2005வது வருஷம் நான் எனது குடும்பத்தினரோடு திருப்பூருக்கு வந்தேன். முதல் முதலில் வந்தவுடன் சிறியதாக ஒரு பிரிண்டிங் தொழில் துவங்க வேண்டும் தொழில் நன்கு நல்ல தொழில் என்பதை அறிந்து எனது தொழில் அனுபவத்தை வைத்து ஒரு சிறிய முதலீட்டில் ஒரு பியூசிங் எந்திரத்தில் எனது தொழில் பயணம் துவங்கியது. எங்கeது துவக்கமே பியூசிங் தொழில் தான். அதன் பிறகு மேனுவல் பிரிண்டிங் எந்திரத்தை வாங்கி ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு ஒரு பார்ட்னருடன் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலை துவங்கினேன். எனது பார்ட்னர் மூலமாகவும் என்னுடைய தொழில் அனுபவத்தின் மூலமாகவும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு தொழிலை துவங்கினோம் . ஆரம்பத்திலிருந்து டெக்னோ ஸ்போர்ட்ஸ்  நிறுவனத்தாருக்கு நாங்கள் பிரிண்டிங் பணிகளை  ஜாப் ஒர்க் முறையில் செய்து கொடுத்தோம். 
அந் நிறுவனத்தார் ஒரு காலகட்டத்தில் செயற்கை நூலிழைகளினால் ஆன பாலியஸ்டர்  ஆயத்த ஆடைகçe உற்பத்தி செய்ய துவங்கினர். பாலியஸ்டர் ஆடைகளில் என்ன மாதிரியான பிரிண்டிங்குகள் அடிக்கலாம் என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு பிரிண்டிங் பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் முதன்முதலில் டிஜிட்டல் துறையில் நுழைந்தோம். அந்த காலகட்டங்களில் டிஜிட்டல் என்ற வார்த்தை ஒரு புதுமையானதாக இருந்தது. ஏனென்றால் திருப்பூரில் அப்பொழுது அதிகபட்சமாக காட்டன் ஆடைகளை உற்பத்தி ஆகி கொண்டிருந்தன. பாலியஸ்டர் நமது திருப்பூரில் இல்லாத காலகட்டத்தில் டெக்னோ ஸ்போர்ட்ஸ் ஒரு பெரிய முயற்சியை எடுத்து பாலியஸ்டர் ஆடை உற்பத்தியை துவங்கினர். டெக்னோ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தார் என்னென்ன துணிகளில் டீசர்ட்கள் உற்பத்தி செய்யலாம் 
என்று அவர்கள் துணிகçe குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தபோது நாங்கள் பாலியஸ்டர் துணிகளில் எவ்வாறு பிரிண்டிங் செய்வது என்பது குறித்து சூரத்திற்கு சென்று அங்குள்ள பாலியஸ்டர் பிரிண்டிங் எந்திரங்களை பார்வையிட்டு, எவ்வாறு அவர்கள் பாலிஸ்டர் துணிகளில் பிரிண்டிங் செய்கிறார்கள் என்ற தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு அந்த தொழில்நுட்பம் நமது திருப்பூருக்கு பொருந்துமா என்பதை ஆராய்ந்து நமது திருப்பூரில் உற்பத்தி செய்யும் டி-ஷர்ட்டுகளுக்கு பயன்படும் விதமாக அவற்றை ஒப்பீடு செய்து பார்த்தோம். பின்பு அதை நவீன தொழில்நுட்பதிற்காக அன்று சீனாவில் இருந்து டேபிள் டாப் பிரிண்டிங் எந்திரத்தை வாங்கி டிஜிட்டல் பிரிண்டிங் பணிகளில் ஈடுபடலாம் என முடிவெடுத்து நாங்கள் டெக்னோ ஸ்போர்ட்ஸ் மூலமாக டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்துறைக்குள்ளாக நுழைந்தோம். ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில்துறையிலிருந்து டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்துறைக்குள்ளாக நாங்கள் காலடி எடுத்து வைத்தோம். இதன் மூலம் எங்களது நிறுவனமும் வeர்ந்தது.
கேள்வி: ரம்யா நிட் பிரிண்டிங்கில் தொழில் துறையினருக்காக என்னெனன் ரகங்களில் பிரிண்டிங் பணிகள் செய்து தரப்படுகிறது?
நமது ரம்யா நிட் பிரிண்டிங்கில் டிஜிட்டல் பிரிண்டிங் பணிகளை நாங்கள் அதிகமாக செய்து தருகிறோம். அதில் சப்ளிமெஷின் பிரிண்டிங் எந்திரங்கள் இன்றைய தொழில்நுட்பத்தில் புதியதாக அறிமுகமாகியுள்ள லேட்டஸ்ட் எந்திரங்கள் எங்களிடம் உள்eது. ஆல் ஓவர் பிரிண்டிங் பணிகçeயும் நாங்கள் செய்து தருகிறோம். பிரிண்டிங் பணிகளில் அனேக ரகங்களில் எண்ணற்ற ரகங்களில் நாங்கள் பிரிண்டிங் பணிகளை செய்து தருகிறோம். எம்போசிங் பிரிண்டிங் அதிலும் எண்ணற்ற ரகங்களும் இரண்டு நான்கு ரகங்களில் பிரிண்டிங் பணிகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம். மேலும், ம்வீய் பிரிண்டிங், 
பணிகளை நாங்கள் கிட்டத்தட்ட 
ஆறு வருடமாக வாடிக்கையாeர்களுக்கு அளித்து வருகிறோம். இந்த டிடிஎஃப் பிரிண்டிங்கை பொறுத்த வரையில் நாமும் அதை செய்து கொடுக்கலாம் அல்லது வாடிக்கையாளர்கள் அவர்களிடத்தில் எடுத்துக்கொண்டு சென்று அவர்களால் எளிதாக இந்த ம்வீய் ஸ்டிக்கரை பியூர் செய்து கொள்e இயலும். சிலிக்கான் மோல்டு பிரிண்ட், வினைல் பிரிண்ட், கட் அண்ட் பேஸ்ட், 
ஹாட் பிக்ஸ் சீக்வன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் 
உள்ளிட்ட பலதரப்பட்ட பிரிண்டிங் பணிகளை ரம்யமான பிரிண்டிங் பணிகளை நாங்கள் 
செய்து  தருகிறோம். எங்களது நிறுவனத்தில்,  நாØளான்றுக்கு 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் பீஸ் வரை உற்பத்திக் கொள்eeவு உள்ளது. அனைத்து வகையான பிரிண்டிங் பணிகளையும் நாங்கள் சிறந்த தரத்தில் செய்து கொடுக்கிறோம். 
கேள்வி: ஒரு பியூசிங் மெஷினில் ஆரம்பித்த உங்கeது தொழில் பயணம் வெற்றியடைவதற்கு நீங்கள் கடைபிடித்த வழி என்ன?
ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்கeது வeர்ச்சி படிப்படியாக இருந்தது. டிஜிட்டல் பிரிண்டிங் துறையான சப்ளிமேஷன் பிரிண்டிங்க்குள் நாங்கள் பயணிக்க எங்கeது வாடிக்கையாளர் டெக்னோ ஸ்போர்ட்ஸ் தான் காரணம். 
மேலும், தொடர்ந்து எங்களது தொழிலில் புதுப்பித்துக் கொள்e நான் டெக்பா சங்கத்தில் உறுப்பினராக இருப்பதால் வெளிநாடுகளில் நடக்கும் பிரிண்டிங் தொழில்துறை கண்காட்சிகளுக்கு சென்று பார்வையிட்டு  ஐரோப்பிய, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு எங்கeது தலைவர் திரு.ஸ்ரீகாந்த் மூலமாக நாங்கள் சென்று கண்காட்சிகள் பார்வையிடுவோம். அதன் மூலமாக பிரிண்டிங் தொழில்துறையில் அநேக புதிய வரவுகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்e முடிந்தது. அந்த தொழில்நுட்பங்களை நமது திருப்பூருக்கு நாம் எவ்வாறு பயன்படுத்த இயலும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்துவோம்.
கேள்வி : உங்கeது ரம்யா நிட் பிரிண்டிங் நிறுவனத்தில் பல வகையான பிரிண்டிங் சாம்பிள்களை உங்களது வாடிக்கையாeர்களுக்காக காட்சிப்படுத்தி உள்ளீர்கள். இவ்வாறு பல ரகங்கçe காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது?
வெளிநாடுகளுக்கு கண்காட்சிகளுக்கு செல்லும் போது பலவகையான பிரிண்டிங் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி இருப்பர் அந்த எந்திரங்களில் இருந்து என்ன மாதிரியான பிரின்டிங்குகள் பெற்றுக் கொள்e இயலும் என்பதை காட்சிப்படுத்தி இருப்பார்கள். இவ்வாறு பார்க்கும் போது அதை குறித்து 
நாம் அறிந்து கொள்e எளிதாக இருக்கும். இதே போல   ஒரு காட்சி மையத்தை நமது நிறுவனத்திலும் உருவாக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஏனென்றால், வாடிக்கையாளர்களிடம் ஒரு பிரிண்டிங் ரகத்தை குறித்து பேசும்பொழுது வாய்மொழியில் அவர்களுக்கு சொல்லும் போது அதைப் பற்றி அவர்களால் முழுவதுமாக அறிந்து கொள்e முடிவதில்லை. ஆனால், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்e சாம்பில்களை அவர்களிடம் காண்பித்து இந்த வகை பிரிண்டிங் இப்படித்தான் இருக்கும் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் போது அவர்களால் எளிதாக பிரிண்டிங் ரகங்கçe தேர்வு செய்து கொள்e முடிகிறது. இதன் மூலமாக வருகிற வாடிக்கையாeர்களுக்கும், பையர்களுக்கும்  நாங்கள் செய்து கொடுக்கும் பிரிண்டிங் ரகங்களை காட்சிப்படுத்த முடிகிறது. பாம்பே, பெங்களூர் அந்த நகரங்களில் உள்ள பையர்கள் அவர்களுக்குரிய டிசைன்களை வைத்திருப்பார்கள் அவர்கள் நேரடியாக வந்து எங்களுடைய காட்சி மையத்தில் உள்e சாம்பிள்களை பார்வையிட்டு எங்கeது டிசைன்களில் உள்e புதுமைகளை பாராட்டி அவைகçe போன்று தங்களுக்கான புதுவகை டிசைன்கçe உருவாக்கி எங்களுக்கு ஆர்டர் அளித்துள்ளார்கள். 
கேள்வி : ரம்யா நிட் பிரிண்டிங் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் மற்றும் உங்களது சேவை பணிகள் குறித்து சொல்லுங்கள்?
இன்று உலகமே டிஜிட்டல் மயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது நமது டெக்ஸ்டைல் தொழில் துறையும் டிஜிட்டல் மையத்தை நோக்கி முன்பே செல்ல துவங்கி விட்டது. நாங்கள் முன்னமே டிஜிட்டல் துறையில் கால் பதித்து விட்டதால் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் சேவை செய்ய முடிகிறது. அவர்களது தேவைகளை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. உள்நாட்டு வாடிக்கையாeர்கள் மற்றும் உள்நாட்டு பிராண்டுகளுக்கும் ஏற்ற விலையை நாங்கள் கொடுத்து வருகிறோம். தரம் விலை இவ்விரண்டும் அவர்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதால் அவர்களுக்கு எளிதில் சேவையை கொண்டு சேர்க்க முடிகிறது. மேலும், நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமாகவும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இல்லாத விலையில் வழங்க நாம் என்ன செய்ய வேண்டும் என ஆராய்ந்து, நாம் எண்ணியதைப் போன்று நமது தேவைக்கேற்ப வடிவமைக்க கஸ்டமைஸ்டு மெஷின் என்பதே தீர்வு என கண்டறிந்தோம். ஸ்கிரீன் பிளக் டிஜிட்டல் மெஷின் ஒன்றை நாங்கள் இன்னும் மூன்று நான்கு மாதங்களில் எங்கeது ரம்யா நிட் பிரின்டிங்கில் அறிமுகம் செய்ய உள்ளோம். ஒரு சில வாடிக்கையாளர்கள் விலை சற்று குறைவாக இருந்தால் 
எங்களுக்கு வசதியாக இருக்கும் என 
கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த எந்திரத்தை நாங்கள் அறிமுகம் செய்ய உள்¼ளாம். கோவையை சேர்ந்த 
யூம்யீ பிரிண்டிங் எந்திர நிறுவனத்திடம் எங்களது தேவைகளை அவர்களிடம் 
சொல்லி வாடிக்கையாeர்களுக்கு விலை குறைவான அதே நேரத்தில் தரமான பிரின்டிங் பணிகளை செய்து கொடுப்பதற்கான தகுந்த எந்திரங்களை ஒவ்வொரு பாகமாக ஆராய்ந்து 
எங்கeது தேவைக்கேற்ப ஒரு எந்திரத்தை வடிவமைத்து உள்¼ளாம். அதனை 
ஆர்டிஎக்ஸ் நிறுவனத்தார் எங்களுக்கு உற்பத்தி செய்து தர உள்ளார்கள். அவற்றை 
இரண்டு மூன்று மாதங்களில் எங்களது நிறுவனத்தில் அறிமுகம் செய்து விடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
RAMYA KNIT PRINTING, No.11, Ramya Garden, Anaipalayam, Sirupooluvapatty (PO), Tirupur - 641 603. Office : 96551 07711, Mob : 95004 67377, 99654 96336.