சர்வதேச மகளிர் தினத்தில் சாதனைப் பெண்களின் சரித்திரம் சொல்லும் சங்கமம். நுகர்வோர் எக்ஸ்பிரஸ் நடத்திய பூவையர் பொக்கிஷம் - 2026 சிறப்பு நிகழ்வு.
- Reporter 12
- 02 Apr, 2026
உலக மகளிர் தினமான மார்ச் 8 ம் தேதி, திருப்பூரில்
உள்ள பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் தொழில்துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து வெளிவரும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் இதழ், பூவையர் பொக்கிஷம் என்ற சிறப்பு நிகழ்வை நடத்தியது. தொழில், சமூகம், சேவைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் சாதனை பெண்களின் சரித்திரம் சொல்லும் இந்த இனிய நிகழ்வில் கோவை சந்திரா குடும்பங்களின் நிர்வாக இயக்குனர் திருமதி.டாக்டர்.நந்தினி ரங்கசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், திருப்பூர் ரோட்டரி பப்ளிக் வெல்பேர் டிரஸ்ட் அமைப்பின் தலைவரும், சேவைச் செம்மலும், மருத்துவ திலகமுமான டாக்டர்.முருகநாதன் அவர்கள் கௌரவ சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சாதனைப் பெண்களின் சரித்திரம் சொல்லும் இந்த நிகழ்வை மேலும், சிறப்புடையதாக பாராட்டி மகிழ்ந்தனர்.
விழாவிற்கு வந்திருந்த, விருந்தினர்கள், சான்றோர்கள் மற்றும் பெண் ஆளுமைகளையும், சாதனையாளர்களையும் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.முத்துக்குமார் அவர்கள் வரவேற்று, விழாவின் வடிவமைப்பு குறித்த விளக்க உரை நிகழ்த்தினார். இந்த இனிய
விழாவை, நுகர்வோர் எக்ஸ்பிரஸ் உதவி ஆசிரியரும், அவரின் மூத்த மகளுமான, திருமதி.ஐஸ்வர்யா முத்துக்குமார் அவர்கள் அழகாக தொகுத்து வழங்கினார். இந்த இனிய விழாவில், பத்மஸ்ரீ டாக்டர் சக்திவேல் அவர்களது துணைவியார், திருமதி. செல்வீஸ்வரி சக்திவேல் அவர்கள். டாக்டர்.முருகநாதன் அவர்களது மனைவியார், டாக்டர்.பானுமதி அவர்கள். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியின் உடைய முதல்வர் டாக்டர்.மனோன்மணி அவர்கள். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர், திரு.கே.எம்.சுப்பிரமணியன் அவர்களது துணைவியார், திருமதி.மகேஸ்வரி சுப்பிரமணியன் அவர்கள். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர், திரு.திருக்குமரன் அவர்களது துணைவியார், திருமதி.லீலாவதி திருக்குமரன் அவர்கள். சுலக்சனா குழுமங்களினுடைய நிர்வாக இயக்குனர் திருமதி.ஆஷா கிருஷ்ணகுமார் அவர்கள் மற்றும் ஏராளமான அன்னையர் சகோதரிகள் சாதனையாளர்கள், சான்றோர்கள் கலந்து கொண்ட இந்த இனிய நிகழ்வில் பெண் சாதனையாளர்களின் சரித்திரங்கள் மற்றும் சேவைகள் குறித்து காணொளி காட்சியாக எல்ஜி டிவி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு அவர்களது பெயர்கள் அழைக்கப்பட்டு பூவையர் பொக்கிஷம் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.
விழாவிற்கு வந்திருந்த

